தி.மு.க கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்தே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். வேறெந்த தொகுதிக்கும் செல்லாமல் சிதம்பரத்திலேயே முழு கவனம் செலுத்தியவர், தலைநகர் தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தது பேசுபொருளாகியுள்ளதுதமிழச்சி தங்கபாண்டியன்
சிதம்பரம் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான திருமாவளவன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இம்முறை குறைந்தது ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் சிதம்பரம் மற்றும் வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்துவந்தார். அதில் 75 சதவிகிதம் சிதம்பரம் தொகுதிதான். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சென்னை வந்த திருமாவளவன், தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, பேசினார். அதேபோல் வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியையும் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனையும் ஆதரித்துப் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ``தி.மு.க-வின் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் எனத் தெரியும், ஆனால் எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெற்றுவிடக் கூடாதென்பதை வலியுறுத்தத்தான் சிதம்பரம் தொகுதி பிரசாரத்தை நிறுத்திவிட்டு வந்தேன்” என்றார்.
தொடர்ந்து, '’இந்த நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டும். அகில இந்திய அளவில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், பா.ஜ.க அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்” என்றார்.திருமாவளவன்
திருமாவளவனின் தலைநகர் பிரசாரம் குறித்து நம்மிடம் பேசிய வி.சி.க முக்கியப் புள்ளிகள், ``சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்றுவிடுவோம் எனத் தெரியும். ஆனால் ஒரு கட்சியின் தலைவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெல்வது சரியாக இருக்காது. எனவே மொத்த தொகுதியையும் சுற்றிவருகிறோம். சென்னையில் வேட்பாளர் யாரும் வீக்காக இல்லை, எளிதாக வெற்றியடையக் கூடியவர்கள்தான். ஆனாலும் அமைச்சர் சேகர் பாபுவின் அழைப்பை திருமாவால் மறுக்க முடியவில்லை. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளைத் தாண்டி பெரம்பலூரில் அருண் நேருவை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். அதற்கடுத்து சென்னைக்கு வந்தார். வரக்கூடிய நாள்களில் சிதம்பரம் தொகுதியில்தான் பிரசாரம் செய்வார் திருமா” என்றனர்.திருமாவளவன் பிரசாரம்
நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், ``திருமாவை சென்னைக்கு பிரசாரத்துக்கு அழைப்பதெல்லாம் சரிதான். ஆனால் மத்திய சென்னை மற்றும் வட சென்னை வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பேசும்போது, வேட்பாளர்கள் மேடையில் இல்லாதது குறையாகத்தான் இருந்தது” என்றனர். அமித் ஷாவின் சிவகங்கை ரோடு ஷோ `ரத்து’ - பின்னணி காரணம் என்ன?!
http://dlvr.it/T5XGHl