'குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் சிவகாசியில் அடுத்தடுத்து நடக்கும் வெடிவிபத்துகள் நெஞ்சை ரணமாக்குவதாக உள்ளது. விருதுநகர் மாவட்டம், ரெங்கபாளையத்தில் கடந்த அக்டோபர் மாதம் சோதனைக்காக வெடித்த பட்டாசால் ஒரே ஆலையில் 12 பெண்கள், ஒரு ஆண் உள்பட மொத்தம் 13 பேர் பலியானார்கள். இதற்கடுத்து பெரிய விபத்தாக வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 ஆண்கள், 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவங்களின் சுவடுகள் மறையும் முன்னரே மற்றுமொரு கோர விபத்தாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி செங்கமலபட்டியில் செயல்பட்டு வந்த சுதர்சன் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 6 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆளுநர், தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்ததுடன், தேர்தல் ஆணைய அனுமதியுடன் இழப்பீட்டு தொகையும் அறிவிக்க தயாராகி வருகின்றனர்.வெடிவிபத்து
இந்த நிலையில், அரசு வழங்கும் இந்த இழப்பீட்டு நிதி பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப மனநிலையை சரி செய்யுமா?, அல்லது இது போன்றதொரு வெடி விபத்தை தடுத்துதான் நிறுத்துமா? என கேள்விகளை எழுப்புகின்றனர் பட்டாசு தொழிலாளர் சங்கத்தினர். இது குறித்து பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் எம்.சி.பாண்டியன் பேசுகையில், "பட்டாசு உற்பத்திக்கும், மூலப்பொருள் கையிருப்புக்கும் அரசு எவ்வளவுதான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் தொடர்ந்து நிகழும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் இருக்கும் ஓட்டைகளையே கைக்காட்டுகின்றன. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் அதிக உயிர்பலிகளுக்கு காரணம், அப்பட்டமான விதிமீறலும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் தான். பட்டாசு உற்பத்தியை பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து முறையான பயிற்சி வழங்குவதற்கு சிவகாசியில் பயிற்சி மையம் உள்ளது.தரைமட்டம்
ஆனால், சிவகாசி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாக்களை சுற்றி செயல்பட்டு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளுக்கும் சேர்த்தே இந்த ஒரேஒரு பயிற்சிமையம்தான் இருக்கிறது. அதுபோல் பட்டாசு உற்பத்தி தொடர்பான கூட்டங்களில் தொழிற்சங்கங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, கள அலுவலர்கள், மாவட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசுவதற்கும் வாய்ப்பு வழங்கினால்தான் தொழிலாளர்களுக்கு இருக்கும் பிரச்னை, நிர்வாக தரப்பின் தவறுகள், அதிகாரிகளின் தவறுகள் பற்றி பேச முடியும். ஆனால், எங்கே உண்மை வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பட்டாசு உற்பத்தி தொடர்பான கூட்டங்களில் தொழிற்சங்கங்கள் தவிர்க்கப்படுகின்றன.ஆய்வு
பட்டாசு வெடி விபத்துகள் தவிர்ப்பது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக் குழுவினர் சமீபத்தில் சிவகாசியில் நடத்தினர். ஆய்வின்படி, 'பட்டாசு வெடி விபத்துகளை தவிர்ப்பதற்கான போதுமான விதிமுறைகளை கடைபிடிப்பதற்கு போதுமான ஏற்பாடுகள் இல்லை என இந்த ஆய்வுக் குழு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. பட்டாசு வெடி விபத்துகளை தவிர்ப்பதற்கும், பட்டாசு ஆலைகளில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப உபகரணங்கள் குறித்தும் இந்த ஆய்வுக் குழு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது' என ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.சேதம்வெடிவிபத்து
இங்கு, பட்டாசு தொழில் பற்றி போதிய விழிப்புணர்வுள்ளவர்களை ஆய்வு அதிகாரிகளாக மாவட்ட நிர்வாகம் நியமிக்க வேண்டும். ஆய்வுக் குழுவில், பட்டாசு தொழிலாளர் சங்க உறுப்பினர் ஒருவரை பிரதிநிதியாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை வலியுறுத்தும் அரசு, ஒவ்வொரு தாலுகாவிலும் தலா இரண்டு பயிற்சி மையங்களை அமைத்து நிரந்தரமான பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு நிதி வழங்குவதுபோல வெடிவிபத்தில் காயமடைந்து கை, கால்களை இழந்து வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டதுபோல, பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிர்வாக தரப்பு 10 லட்சமும், தமிழக அரசு 15 லட்சம் ரூபாயும் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும்" என்றார்.உயிரிழந்தவர்கள்தீயணைப்பு
காவல்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், "விருதுநகர் மாவட்டத்தில் 1,087 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் 2,963 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ஆலைகளில், உரிய பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காதது, முறையற்ற ரசாயன கலவையால் அதிக விபத்துகள் நடக்கிறது. மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை 70க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளன. இதில், 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளனர். சுமார் 175 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்திக்கான பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரே அறையில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதே வெடிவிபத்துக்கு காரணம். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆலை ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன், போர்மென் சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளரும் மாற்றுத்திறனாளியுமான சரவணனிடம் இது குறித்து உரிய விசாரணை நடத்திவருகிறோம்" என கூறினர்.உயிரிழந்தவர்கள்
வெடிவிபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், "கடந்த பிப்ரவரியில் நடந்த வெடிவிபத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலை செயல்படவில்லை என்றுதான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஓராண்டாக செயல்படாத நிலையிலிருந்த இந்த ஆலையை, கடந் த மார்ச் மாதம்தான் குத்தகைக்கு எடுத்து பட்டாசு உற்பத்தி பணியை தொடங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பட்டாசு ஆலையை குத்தகை எடுத்து நடத்தியது, விதிமீறல் தொடர்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 82 பட்டாசு ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்துசெய்துள்ளோம். இருப்பினும் தொடர்ச்சியான பட்டாசு விபத்தில் பெரும் உயிர்சேதத்திற்கு காரணம், போதிய பயிற்சி இல்லாத தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதுதான்.ஆட்சியர் ஜெயசீலன்
பட்டாசு விபத்துகளை தவிர்ப்பதற்கும், உயிர்சேதங்களை குறைப்பதற்கும் கட்டாய 'பயிற்சி' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயிற்சியை புறக்கணிக்கும் நிறுவனத்தினருக்கு அபராதத்துடன் பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி என்ற விதியை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் உரிமத்தின் வகை, உரிமம் எண், ஆலையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், கையிருப்பு, தயாரிக்கப்படும் வெடி ரகங்கள் ஆகியவை குறித்து அடுத்த ஒரு வார கால அவகாசத்திற்குள் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறோம். செங்கமலப்பட்டியில் நடைபெற்ற வெடிவிபத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வெட்டவெளியில்..
பட்டாசு ஆலைகளை குத்தகையின் பெயரிலோ உள்குத்தகைக்கு எடுத்தோ தொழில் செய்யும் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட குத்தகைத்தாரர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், பட்டாசு ஆலை ஆய்வு தொடர்பான விஷயங்களில் அலட்சியமாக செயல்படும் அரசு அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து காயம்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிடும் வகையில் பட்டாசு தொழிலாளர் வாரியத்திலிருந்து இழப்பீடு நிதி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான வரன்முறைகள் தயார்செய்யப்பட்டு அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு, அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbசிவகாசியில் இடைவிடாது ஒலிக்கும் மரண ஓலம்; அதிகரிக்கும் பட்டாசு ஆலை வெடி விபத்துகளுக்கு காரணம் என்ன?
http://dlvr.it/T6t1RB