PM Modi Oath Ceremony - மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்களின் லிஸ்ட்!
மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடியின் பதவியேற்பு விழா, இன்று இரவு 7:15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அண்டை நாடுகளின் பல தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று பல தலைவர்கள் இந்தியா வந்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மோடி
இந்த விழாவில் கலந்துகொள்வதாக உறுதி செய்த தலைவர்கள்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சு
சீஷெல்ஸின் துணைத் தலைவர் அகமது அஃபிஃப்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் ‘பிரசந்தா’
பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே
PM Modi Oath Ceremony (மோடி) - முதல் வெளிநாட்டு விருந்தினராக இந்தியாவுக்கு வந்த வங்க தேச பிரதமர்!
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறவிருக்கும் நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் டெல்லிக்கு வருகை தர தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா முதல் சிறப்பு விருந்தினராக நேற்றைய தினமே டெல்லிக்கு வந்துவிட்டார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
PM Modi Oath Ceremony - 1000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்!
டெல்லியில் இன்று மாலை மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியமைக்கவிருக்கிறது. இந்தப் பெரும் விழாவை முன்னிட்டு, டெல்லியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இன்று மதியம் 2 மணிக்கு, ராஷ்ட்ரபதி பவன் அமைந்திருக்கும் பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, போக்குவரத்து முடக்கப்படும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
PM Modi Oath Ceremony - ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மோடி மரியாதை!
மோடி, இன்று மாலை மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நிலையில், டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று, மரியாதை செலுத்தினார்.
மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த பாஜக, இந்தமுறை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகவே, தெலுகு தேசம் மற்றும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் 543 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க, 240 இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல அந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றது.
Modi (மோடி) - மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சி!
அதைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வேலைகள் என்.டி.ஏ தரப்பில் மும்முரம் காட்டப்பட்டது. மூன்றாவது முறையாக மோடியே மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார். அதேபோல என்.டி.ஏ கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். NDA - மோடி
ஆனால், அமைச்சரவையைப் பொறுத்தவரையில் இந்த முறை பலத்த மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், பா.ஜ.க ஆட்சி அரியணையில் அமர்வதற்கு, முக்கியப் பங்காற்றிய டி.டி.பி, ஜே.டி.யூ மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் துறைகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. எனவே, முக்கியமான சில துறைகளை தங்களிடத்தில் வைத்துக்கொண்டு, `4 எம்.பி-க்களுக்கு 1 அமைச்சர் பதவி' என்ற கணக்கில் கூட்டணிக் கட்சியினருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த பதவி ஒதுக்கீடு பணிகள் திரை மறைவில் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் ஆதரவு எம்.பி-க்களின் பட்டியலுடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆட்சியமைக்க கடந்த வெள்ளிக்கிழமை உரிமை கோரினார், மோடி. குடியரசுத் தலைவரும் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஆட்சியமைக்குமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
PM Modi Oath Ceremony (மோடி) : புதிய அரசின் அமைச்சரவையில் 30 பேர்?
மோடி (Modi)
இன்று மாலை 7:15 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைக்கிறார். மோடியைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் பிறரும் பதவி ஏற்பார்கள். அமைச்சரவையில் மொத்தம் 30 பேர் இடம்பெறுவார்கள் எனச் சொல்லப்படும் நிலையில், யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு செய்வதென்ற ஆலோசனை தொடர்ந்து நீடித்து வருவதாக, டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.`என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அர்பணிக்கப்பட்டிருக்கிறது!' - அரசியலமைப்பை தலையில் தொட்டு வணங்கிய மோடி
http://dlvr.it/T81wcn