பொங்கியெழுந்த பெண் நிர்வாகி!அவதூறு பரப்பிய வார் ரூம்...
கொங்குத் தொகுதியில், `அந்தத் தலைவர் தோற்றதுக்குக் காரணம் கட்சியின் சீனியர் பெண் நிர்வாகிதான்’ என வதந்தியைப் பரப்பியிருக்கிறார்கள் வார் ரூம் நிர்வாகிகள். “அண்ணன் ஜெயிக்கிறது அவங்களுக்குப் பிடிக்கலை. அதனாலதான், தேர்தல்ல எந்த வேலையும் செய்யாம அவர் தரப்பு ஒதுங்கிடுச்சு” என அந்தப் பெண் நிர்வாகி பற்றிச் சகட்டுமேனிக்கு சமூக வலைதளங்களில் விமர்சித்திருக்கிறார்கள். பொங்கி எழுந்த அந்தப் பெண் நிர்வாகி, `அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், தனது தொகுதியில்தான் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன’ என்ற புள்ளிவிவரத்தை எடுத்து, அதில் தன்மீது பரப்பப்பட்ட அவதூறு தகவல்களையும் இணைத்து டெல்லிக்கு புகாராக அனுப்பியிருக்கிறாராம். அந்தப் புகாரில், ‘தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வெற்றி வாய்ப்பையும் தன் வாயால் கெடுத்துவிட்டார் அவர்’ என்ற தகவலையும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறாராம். “ஏற்கெனவே முன்னாள் பெண் தலைவர், சீனியர் பெண் அமைச்சர் ஆகியோரைப் பகைத்துக்கொண்ட இவர், இப்போது இந்தப் பெண் நிர்வாகியோடும் வம்பு வளர்க்கிறாரே?” எனப் பொங்குகிறார்கள் கமலாலய சீனியர்கள்.தலைமையை `ஓகே’ சொல்லவைத்த அமைச்சர்!கொங்கு மண்டலத்தில் வெற்றி விழா...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளில் வெற்றிபெறச் செய்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தி.மு.க தலைவருக்குப் பாராட்டு விழா ஆகிய மூன்று நிகழ்ச்சிகளையும் சேர்த்து முப்பெரும் விழாவாகக் கோவையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. முதலில் இந்த முப்பெரும் விழாவை, சென்னையில் நடத்தத்தான் தி.மு.க முடிவுசெய்திருந்ததாம். ஆனால், “எதிர்க்கட்சிகளின் சுயதம்பட்டத்தை மீறி, இந்த முறை கொங்கு மண்டலத்தில் எல்லாத் தொகுதிகளிலும் நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். அமைச்சர் முத்துசாமி
இந்தச் சூட்டோடு சூடாக ஒரு பெரிய விழாவையும் நடத்திவிட்டால், கொங்கு மண்டலத்தில் நமக்கு மேலும் செல்வாக்கு அதிகரிக்கும். எனவே, கோவையில் அந்த விழாவை நடத்தலாம்” என யோசனை சொல்லியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி. கூடவே, அதற்கான பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். ``அதற்கு `ஓகே’ சொன்ன தலைமை, முப்பெரும் விழாவைக் கோவையில் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது’’ என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.இரண்டு மாங்காய் அடித்த பொன்முடி!மா.செ பதவியை இழந்த மஸ்தான்...
அமைச்சர் மஸ்தானை விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு, அந்த மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் ப.சேகரை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது தி.மு.க தலைமை. இதன் பின்னணியை விசாரித்தால், “விழுப்புரம் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில்தான் தி.மு.க கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் (வி.சி.க) குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அங்கே வாக்கு வித்தியாசம் வெறும் 6,823-தான். `இதற்கு மஸ்தான் தரப்பு சரியாகத் தேர்தல் வேலை செய்யாததே காரணம்’ என்று தலைமைக்குப் புகார்கள் பறந்திருக்கின்றன. பொன்முடி
இதைச் சாக்காகவைத்து அமைச்சர் பொன்முடியும் மஸ்தானுக்கு எதிராகக் காய்நகர்த்த, அதற்குக் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. மஸ்தானின் பதவியைப் பறித்தது, மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தி வகித்த விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவிக்குத் தன் மகன் கெளதம சிகாமணியைக் கொண்டுவந்தது என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் பொன்முடி” என்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.தலையில் அடித்துக்கொள்ளும் சீனியர்கள்!மீண்டும் தி.மு.க-வைச் சீண்டிய பெருந்தகை...
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து சென்னையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய செல்வப்பெருந்தகை, “தமிழகத்தில் எத்தனை காலம் பிறரைச் சார்ந்திருக்கப்போகிறோம்... சுயமாக நாம் வளர வேண்டாமா... பிற கட்சிகளைச் சாராத நிலை வேண்டுமென்றால் அதற்குத் தொண்டர்கள்தான் பதிலளிக்க வேண்டும். அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். எந்தத் திசையில் செல்லப்போகிறோம் என்பதைத் தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்றிருக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம்
``தமிழ்நாட்டில் காங்கிரஸின் உற்ற தோழனாக தி.மு.க இருக்கிறது. தேர்தல் வரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து தி.மு.க-வுக்கு எதிராகப் பேசுவது நல்லதல்ல. பா.ஜ.க-வில் இப்படிப் பேசிப் பேசித்தான் ஒருவர் கூட்டணியை உடைத்தார். அதே வேலையை இவர் பார்க்காமலிருந்தால் சரி” என்று சீனியர் நிர்வாகிகள் சிலர் தலையில் அடித்துக்கொண்டார்களாம்.கூட்டணியிலிருந்து விலகுவாரா ரங்கசாமி?தொடர்ந்து அவமதிக்கும் பா.ஜ.க...
நீண்டகாலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும், தன்னை பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லையென்ற கடுப்பில் இருக்கிறாராம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. அதுமட்டுமல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கும் அவரை அழைக்கவில்லை. “புதுச்சேரி அரசுக்கும் கூட்டணிக் கட்சியாக எந்த ஒத்துழைப்பும் தராமல், அரசுக்கு எதிரான அரசியலையே முன்னெடுக்கிறார்கள். முதல்வர் ரங்கசாமி
தொடர்ந்து அவமதிக்கிறார்கள்... பேசாமல் கூட்டணியிலிருந்தே விலகிவிடலாமா?” எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் ரங்கசாமி. அவர்களோ, “மத்தியில் இப்போதும் அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். எனவே, கூட்டணியிலிருந்து விலகி அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்” என அவரை அமைதிப்படுத்தினார்களாம். `இப்போதைக்கு அவர் சமாதானமாகிவிட்டார்... ஆனால், எப்போது வேண்டுமானாலும் அவர் பொங்கியெழலாம்’ என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88மிஸ்டர் கழுகு: பதவிக்காக முட்டிமோதிய பாலு; வதந்தி பரப்பிய அண்ணாமலை!
http://dlvr.it/T8Clv1