Monday, 17 June 2024
Sunday, 16 June 2024
`அரசியலமைப்பு சட்டத்தை முத்தமிட வேண்டிய இக்கட்டில் பிரதமர் மோடி; ஸ்டாலினே அதற்கு காரணம்!' - ஆ.ராசா
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக எம்.பி-யாகத் தேர்வாகியிருக்கிறார் ஆ.ராசா. இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகனை தோற்கடித்து, 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆ.ராசா
வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் கட்சி நிர்வாகிளைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றும் , பொது இடங்களில் உரை நிகழ்த்தியும் வருகிறார், ஆ.ராசா.
இன்று மதியம் ஊட்டி சேரிங்கிராஸ் காந்தி சிலை பகுதிக்கு வருகைத் தந்த ஆ.ராசாவிற்கு, தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய எம்.பி ஆ.ராசா, "நாற்பதுக்கு நாற்பது என்ற நமது இலக்கை தமிழ்நாட்டில் மக்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வெற்றி இது. மற்ற மாநிலங்களில் ஒரு இடத்தையாவது மற்றவர்கள் பிடித்திருக்கிறார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் உருவெடுத்த திராவிட தத்துவ மண் என்பதை மக்கள் புரிய வைத்திருக்கிறார்கள். இந்த வெற்றி முதல்வர் ஸ்டாலினுக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் கிடைத்த வெற்றி. ஆ.ராசா
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என விரும்பினோம். ஆனால், கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறது. பா.ஜ.க-வின் சர்வாதிகாரத்தை தடுக்கும் வலிமையோடு எதிர் அணியில் இருக்கிறோம். மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டிருக்கிறது. மதிக்க மாட்டோம் என சொல்லிக் கொண்டிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முத்தமிட வேண்டிய இக்கட்டிற்கு மோடியை தள்ளிய பெருமை தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினையேச் சேரும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbEVM: ``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு `கருப்பு பெட்டி' " - Elon Musk கருத்துக்கு ராகுல் ஆதரவு!
http://dlvr.it/T8Lgmd

`வெற்றி, தோல்வி என்பது மாறி மாறித்தான் வரும்..!' - எடப்பாடி பழனிசாமி
"ஈரோடு கிழக்கு போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்பதால், அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை..." என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் பி.வி.கதிரவன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``அதிமுக எழுச்சியோடு வலிமையோடு உள்ளதை இந்நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.." என்றவரிடம்,
"விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு என்பது பாஜக-வுக்கு ஆதரவாக எடுத்த முடிவு என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாரே?" என்றதற்கு,எடப்பாடி பழனிசாமி
``விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது அதிமுக எடுத்திருக்கும் முடிவு, அதிமுக-வுக்கும் ப.சிதம்பரத்திற்கும் என்ன சம்பந்தம்... அவருடைய கட்சியில் எடுக்கப்பட்ட முடிவல்ல.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நடந்தவை உங்களுக்கெல்லாம் தெரியும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல் அடைத்து வைத்து திமுக கொடுமைப்படுத்தியது. தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மாநில அரசுக்கு துணை போனார்கள். இடைத்தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம், பண பலத்தை பயன்படுத்தி அதிகமான பரிசு பொருள் கொடுத்து தேர்தலில் தில்லுமுல்லு செய்தனர்.
ஈரோடு கிழக்கு போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்பதால், அதிமுக போட்டியிடவில்லை.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் அதிமுக-வுக்கு 6,000 வாக்குகள்தான் குறைவாக கிடைத்தது. விக்கிரவாண்டியில் அதிக வாக்குகள் பெற திமுக-வினர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை வாரி இரைப்பார்கள், பூத் வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பணத்தை கொடுப்பார்கள், விக்கிரவாண்டியில் ஜனநாயக படுகொலை நடைபெறும், சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது, ஆகவேதான் விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.டாக்டர் சரவணன் இல்லத்தில்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு வேறு எந்த காரணமும் இல்லை, ஈரோடு கிழக்கில் கூட்டணி கட்சிக்காக 36 அமைச்சர்கள், பட்டியில் அடைத்து வைத்ததுபோல வாக்காளர்களை அடைத்து வைத்திருந்தனர். வாக்காளர்களை விடுவிக்கவில்லை என்றால், நானே நேரில் வருவேன் என சொன்ன பிறகு வாக்காளர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்றனர்.
2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 38 இடங்களைப் பிடித்தது, 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களை பிடிக்கும் எனக் கூறினார்கள். ஆனால், அந்த தேர்தலில் அதிமுக 75 இடங்களை பிடித்தது, ஆகவே சட்டமன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு என தேர்தல்களை பிரித்து பார்த்துதான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் நிலக்கோட்டையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என பிரித்துப் பார்த்து சிந்தித்துப் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள்.
2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகக் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை, அதுபோலத்தான் மாறி மாறி வெற்றி தோல்விகள் கிடைக்கும், அரசியல் கட்சிகளை பொறுத்த அளவுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது, வெற்றி, தோல்வி என்பது மாறி மாறித்தான் வரும்,
2026-ல் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என்றார்.
பின்பு, மதுரை டாக்டர் சரவணனின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற அவர் வீட்டுக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbஇபிஎஸ்-க்கு ஸ்டாலின் சவால்; பாலு, கனிமொழி... வணக்கம் மிஸ்ஸிங் - கோவை திமுக முப்பெரும் விழா ஹைலைட்ஸ்!
http://dlvr.it/T8LgXr

"wait and see... 40 எம்.பிக்கள் உங்கள் ஆணவங்களை அடக்குவார்கள்" - திமுக முப்பெரும் விழா ஹைலைட்ஸ்
திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
"இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. நம் அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள, மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்கள், அம்பேத்கரின் அரசியல் சாசனம் முன்பு தலைகுனிந்து நிற்கின்றனர். இந்த மேடையில் உள்ள தலைவர்களிடையே அரசியல் உறவு இல்லை. இது கொள்கை உறவு. தேர்தல் அறிவித்த பிறகும் பாஜக விதிகளை மீறி வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டது. திமுக முப்பெரும் விழா
ஒடிசாவிலும், பீகாரிலும் தமிழர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பினர். நாடாளுமன்றத்தில் 234 உறுப்பினர்கள் பாஜகவுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். 40 எம்பிக்கள் நாடாளுமன்றம் கேன்டீன் சென்று, வடை சாப்பிடுவார்கள் என சில அதிமேதாவிகள் கூறுகிறார்கள். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் கருத்துகளால் உங்கள் ஆணவங்களை அடக்குவார்கள். wait and see.
பலம் பொருந்திய எம்பிக்கள் இணைந்து, பலம் இல்லாத மைனாரிட்டி பாஜகவின் பாசிச செயல்களைத் தடுத்து நிறுத்தங்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஜகவைத் தடுத்து, அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கும் அரணாக 40 எம்பிக்கள் இருப்பார்கள்.திமுக முப்பெரும் விழா
சட்டமன்ற தேர்தல் வரும்போது, அதிமுக வசமுள்ள தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனச் சிதம்பரம் கூட்டத்தில் பேசினேன். தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்துப் பேசினேன். தமிழக மக்களின் நம்பிக்கை வீண் போகாது. தமிழகத்தில் இனி எப்போதும் திராவிட மாடல் ஆட்சிதான் என்ற நிலை உருவாக உழைப்போம்."
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்..!
"தென்னிந்தியாவில் பாஜகவால் காலூன்ற முடியாத ஒரே மண் தமிழ்நாடு மட்டும்தான். எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் வெல்ல முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு இந்த பாராட்டு விழா போதாது. அகில இந்தியத் தலைவர்கள் கூடி அவருக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும். தேர்தல் காலத்தில் கூட்டணி அமையும். பிறகு சிதறிவிடும். அது அடுத்த தேர்தலில் தொடராது. பாஜக - அதிமுக கூட்டணி அப்படித்தான். ஆனால் இது மக்கள் நலனுக்காக உருவான கூட்டணி. 4 தேர்தல்களைக் கூட்டணி சந்தித்து வென்றுவிட்டது. திமுக 5 லட்சம் வாக்குகளில் வென்ற திண்டுக்கல்லைக் கம்யூனிஸ்ட்களுக்கு கொடுத்தவிட்டு, கோவையில் திமுக நேரடியாக இறங்கி ரிஸ்க் எடுத்தது. திமுக முப்பெரும் விழா
இதுதான் அவரின் ஆளுமை. இங்கே மழைக்கால தவளை போல, 'தாமரை மலரப் போகிறது.' எனக் கத்திக் கொண்டிருந்தவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ரிஸ்க் எடுத்தனர். திருமாவளவனை விசிக வேட்பாளர் என பார்க்காமல் திமுக வேட்பாளராகப் பார்த்து வெற்றி பெற வைத்தார். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அமைச்சர்களிடம் நிலவரத்தை விசாரித்தார். காங்கிரஸ் காரர்களே, அடுத்த பிரதமர் யார் என்று சொல்லாத நிலையில் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முன்னிறுத்தியவர் ஸ்டாலின். அகில இந்தியளவு பாஜவை வீழ்த்த மிக முக்கியமான ஒருங்கிணைப்புகளை முன்னெடுத்தார்."
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:
"தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற முதல்வர் ஸ்டாலினின் ஒருங்கிணைப்பு முக்கியமானது. சில மாநிலங்களில் நம் கூட்டணியினர் பெரியண்ணன் மனநிலையில் நடந்துகொண்டதால் அங்கு பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனச் சொல்லிக்கொண்டிருந்த அதிமுக, இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்து யாருக்கு உதவுகிறார்கள்.திமுக முப்பெரும் விழா
இதன்மூலம் அவர்கள் அடுத்து எங்கு செல்லப் போகிறார்கள் எனத் தெரிகிறது. நம் கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைப்புடன் பணியாற்றி விக்கிரவாண்டியில் வெற்றி பெற வேண்டும்."
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
"நம்முடைய முதலமைச்சர் கைகாட்டுபவர் பிரதமராகும் காலம் விரைவில் உருவாகும். மோடியால் கூட்டணி ஆட்சி நடத்த முடியாது. மோடியால் நாடாளுமன்றத்தில் வாலாட்ட முடியாது. விரைவில் பாஜக ஆட்சி கவிழும். தேர்தல் ஆணையம் சரியாகச் செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். கோவையில் நாங்கள் வெற்றி பெற்றதால், இந்தத் தொகுதியைக் கேட்டோம். ஆனால் முதல்வர் எங்களை திண்டுக்கல்லில் போட்டியிடச் சொன்னார். திமுக முப்பெரும் விழா
நாங்கள் தயங்கினோம். கோவையில் அண்ணாமலை என்ற அருவருக்கத்தக்கச் சக்தியை வீழ்த்த திமுக இங்கு நேரடியாகக் களமிறங்கிவிட்டு, அவர்கள் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை எங்களுக்குக் கொடுத்து, தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக எடப்பாடி அறிவித்துள்ளார். அவரை மக்கள் எப்போதோ புறக்கணித்துவிட்டனர்."முப்பெரும் விழா: ``இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக ஆட்சிசெய்யப்போவது திமுக-தான்" - முதல்வர் ஸ்டாலின்
http://dlvr.it/T8LDlb

Saturday, 15 June 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக - எடப்பாடி கூறும் காரணமென்ன?!
விக்கிரவாண்டி தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, அங்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தி.மு.க சார்பில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவாவும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பா.ம.க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணியும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த சூழலில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்குப் பின் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.அதிமுக தலைமை அலுவலகம்
தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பதும், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதையும் நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அராஜகம் என்றால் தி.மு.க... தி.மு.க என்றால் அராஜகம். திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள்.
அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும், 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள்.
தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். 2006-ல், மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க-வினரால் வெளிப்படையாக நடத்தப்பட்ட வன்முறைகள், அராஜகங்கள், தமிழகமெங்கும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் கடத்தப்பட்டது, தேர்தல் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டது, அ.தி.மு.க வெற்றி பெற்ற இடங்களில் தேர்தல் அதிகாரியை அச்சுறுத்தி, மிரட்டி, தி.மு.க வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்ததை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
அதே போல், 19.2.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வினர் பணபலம், படைபலத்துடன் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களையும், வன்முறைகளையும், அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்தத் தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து விடியா தி.மு.க ஆட்சியில், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி, மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் திமுக கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள்.இடைத்தேர்தல்
இதனால் தோல்வி உறுதி என்று தெரிந்த தி.மு.க, ஈவு இரக்கமற்ற வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்தது. 'திருமங்கலம் பார்முலா' என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப் போல, 'ஈரோடு கிழக்கு பார்முலா' என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பதைப் போல், வாக்காளர்களை அடைத்து அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது. எதிர்க்கட்சியின் பரப்புரைகள் மக்கள் காதுகளிலேயே விழாத அளவிற்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்.
`மக்களை அடைத்து வைத்தால், மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கே சென்று மக்களை சந்திப்பேன்’ என நான் எச்சரித்த பிறகு, பேருந்துகளில் மக்களை அடைத்து சுற்றுலா அழைத்துச் செல்லும் புது பார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக. அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி, தி.மு.க-வின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. தி.மு.க-வின் 'மக்கள் அடைப்பு முகாம்கள்' ஈரோடு (கிழக்கு) தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்திற்கு வர மறுத்த அப்பாவி மக்கள் திமுக-வினரால் மிரட்டப்பட்டார்கள்.
அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டடிருந்த மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவும், வீட்டுக்குச் செல்லும் போது வீட்டில் உள்ள அனைவருக்கும் இரவு உணவு மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கி ஜனநாயகப் படுகொலை நடந்தேறியது. தி.மு.க-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
தி.மு.க-வினர் செய்யும் அனைத்து அராஜகங்களையும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் (மாவட்ட ஆட்சித் தலைவர்), சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் பலமுறை நேரில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும், ஆளும் கட்சிக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயகப் படுகொலை அரங்கேறியது. அந்த வகையில் விடியா தி.மு.க ஆட்சியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது. விடியா அரசின் அமைச்சர்களும், தி.மு.க-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள்.ஸ்டாலின்
மேலும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு குடும்பம் மட்டும் அசுர வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிகார துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுப்பது, வெற்று வாக்குறுதிகளை அளிப்பது, விளம்பரங்கள் செய்வது முதலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க-வினரின் முகத்திரையைக் கிழித்து, விடியா தி.மு.க ஆட்சியின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எதிர்வரும் 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடும், தமிழக மக்களின் பேராதரவோடும், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு அ.தி.மு.க-வின் மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக-வின் திட்டம்தான் என்ன?!
http://dlvr.it/T8KDCt

Modi: `ஹலோ ஃப்ரம் தி Melodi டீம்!’ - இத்தாலிய பிரதமர் மெலோனி வெளியிட்ட செல்ஃபி வீடியோ
இத்தாலியின் அபுலியா மாகாணத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஜி7 உச்சிமாநாடு தொடங்கி நடைபெற்று. இந்த மாநாட்டில் அதிபா் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமா் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் எடுத்துக்கொண்ட செல்ஃபி-களும் வீடியோகளும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
குறிப்பாக அபுலியாவில் நேற்று உச்சிமாநாடு தொடங்குவதற்கு முன்பு எடுத்த செல்ஃபியும், மற்றொரு செல்ஃபி வீடியோவில், ``Hello from the Melodi Team" என்று மெலோனியுடன் சிரித்துக்கொண்டே கேமராவை நோக்கி கை அசைக்கும் பிரதமர் மோடியின் வீடியோவும் வைரலாகிவருகின்றன. கடந்த ஆண்டு இத்தாலிய பிரதமர் மெலோனியும் பிரதமர் மோடியும் அரசுமுறையாக சந்தித்துக்கொண்டதற்குப் பிறகு, மெலோடி என்ற வார்த்தை சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Hi friends, from #Melodi pic.twitter.com/OslCnWlB86— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 15, 2024
கடந்த ஆண்டு கூட, துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் எடுத்த செல்ஃபி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் மெலோனி என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88400 நாள்களாக பற்றி எரியும் மணிப்பூர்... ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேச்சைக் கேட்பாரா மோடி?
http://dlvr.it/T8JvBr