தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்ல திருமண விழாவுக்காக மணமக்களைச் சந்திக்க வந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் சபாநாயகர் அப்பாவு, புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
``இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் அவரவர்கள் இஷ்டப்படி செல்கிறார்கள். அது போன்று பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்று கூறி உலக அளவில் செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில்தான் நடைபெற்றது. இந்தியாவில் தொழில்துறையில் 14-வதாக இருந்த மாநிலம் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் எந்த மாநிலத்தில் தொழில் முதலீடு செய்யலாம் என்று சொன்னால், அதற்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று கூறி அதிகப்படியானோர் வந்து கொண்டு உள்ளனர். அது அனைவருக்கும் தெரியும். இதற்குப் பிறகு சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்று கூறினால் என்ன சொல்வது என்று தெரியவில்லை... அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய மாநிலம்தான் தமிழ்நாடு. தனிப்பட்ட முறையில் நடக்கும் பிரச்னைகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. சட்டமன்றத்தில் கடந்தாண்டு எவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றது.. இந்த ஆண்டு எவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்ற புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்கப்பட்டது. ஒரு அரசின் மீது குற்றச்சாட்டு எப்போது சொல்ல வேண்டும் என்றால் ஒரு குற்ற சம்பவம் நடைபெற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்தான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த அரசு சம்பவம் நடைபெற்ற அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுத்து யாராக இருந்தாலும் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து சரியான நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் முன்பு நிறுத்துகிறார்கள். காவல்துறை அவர்களால் முடிந்தவற்றை செய்து வருகின்றனர். அப்பாவு
நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு முடிந்த அளவு கொடுக்க வேண்டும். பல இடங்களில் ஒத்துழைப்பு குறையும் போது வழக்கை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இன்று பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். நானும் பாதுகாப்பாக தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திக்கு வருகிறேன். இதற்கு மேல் என்ன பாதுகாப்பு வேண்டும்... தனிப்பட்ட முறையில் நடைபெறும் சம்பவங்களை நாம் பெரிதுபடுத்தக் கூடாது. எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் அமர்ந்து பேச வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் என்று கூறுகின்றனர். பிரதான எதிர்க்கட்சியின் பேச்சு ஒன்று கூட சட்டமன்றத்தில் பதிவாகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சட்டமன்றம் என்றால் அதற்கு ஒரு விதிமுறை உள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி பேரவை விதிப்படிதான் சட்டமன்றம் கூடும். காலையில் கேள்வி நேரம். அப்பாவு
ஆனால், கேள்வி நேரத்திற்கு முன்பாகவே வெளியே செல்ல வேண்டும் என்று தகராறு செய்தால் நாம் என்ன செய்ய முடியும்?. ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். நடக்கும் குற்ற சம்பவங்களை காவல்துறையினரிடம் ஊடகத் துறையினர் கொண்டு சென்று சேர்த்தால் சரியாக நடக்கும். நான்காவது பெண் சரியாக இருந்தால் நாடே சரியாக இருக்கும். அதற்காக நான், நீங்கள் சரியாக இல்லை என்று கூறவில்லை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbரூ.900 கோடி குத்தகை பாக்கி; ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்; பாதுகாக்க வலுக்கும் குரல்கள்!
http://dlvr.it/T9Q3cJ