Monday, 15 July 2024
Sunday, 14 July 2024
`4 ஆண்டுகளில் 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா?' - மோடியிடம் கார்கே முன்வைக்கும் 3 கேள்விகள்!
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அரசைக் குற்றம்சாட்டி மக்களிடம் முன்வைத்த நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று `வேலைவாய்ப்பின்மை'. தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் குஜராத்தில் கடந்த வாரம்கூட, தனியார் நிறுவனத்தில் சொற்ப இடங்களுக்கான இன்டெர்வியூக்காக சுமார் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.Job opportunities | வேலைவாய்ப்புகள்
இவ்வாறிருக்க, மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி, `சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த விரிவான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்த 3, 4 ஆண்டுகளில் சுமார் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை வேலைவாய்ப்புகள் குறித்த போலிக் கதைகளைப் பரப்புபவர்களை மௌனமாக்கியிருக்கிறது' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே மோடியிடம் இது தொடர்பாக மூன்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து கார்கே தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``மும்பையில் நேற்று நீங்கள் (மோடி) வேலைவாய்ப்புகள் பற்றி பொய் பரப்பிக்கொண்டிருந்தீர்கள். எனவே, National Recruitment Agency (NRA)-ஐ அறிவிக்கும் போது நீங்கள் கூறியதை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.மல்லிகார்ஜுன கார்கே
`கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு NRA ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்தப் பொதுவான தகுதித் தேர்வின் மூலம், பல தேர்வுகள் நீக்கப்பட்டு பொன்னான நேரம் மிச்சப்படுத்தப்படும். மேலும், இது வெளிப்படைத்தன்மைக்கும் மிகுந்த ஊக்கமளிக்கும்' என்று 2020 ஆகஸ்டில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இப்போது, உங்களுக்கு என்னுடைய மூன்று கேள்விகள்... `(1) கடந்த நான்கு ஆண்டுகளாக NRA ஒரு தேர்வைக்கூட நடத்தாது ஏன்? (2) கடந்த நான்கு ஆண்டுகளில் NRA-க்கு ரூ.1,517.57 கோடி நிதி வழங்கப்பட்டும், இதுவரை ரூ.58 கோடி மட்டுமே செலவிடப்பட்டது ஏன்?பிரதமர் மோடி
(3) அரசுப் பணிகளுக்கான ஆள்சேர்ப்புக்காக NRA உருவாக்கப்பட்டது. அதில், SC, ST, OBC மற்றும் EWS இளைஞர்களின் இட ஒதுக்கீடு உரிமைகள் பறிக்கப்பட வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே NRA செயலிழக்கச் செய்யப்பட்டதா?'. வினாத்தாள் கசிவு போன்ற மோசடி தேசிய தேர்வு முகமையால் செய்யப்பட்டது. மறுபக்கம், NRA ஒரு தேர்வைக் கூட நடத்தவில்லை. கல்வி முறையைச் சீரழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் பணியை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கையிலெடுத்திருக்கிறது. NRA பிரச்னையை நாங்கள் முன்பே எழுப்பியிருந்தோம். ஆனாலும், மோடி அரசு இதில் மௌனம் சாதிக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.அரசே செய்யும் வேலைவாய்ப்பு மோசடி!
http://dlvr.it/T9ZbVX

`மாநில சிறப்பு அந்தஸ்து கிடையாது!' - நிதிஷ், சந்திரபாபு கோரிக்கைக்கு மத்தியில் மத்திய அமைச்சர்
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதில், தனியாக 370 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களை இலக்கு வைத்த பாஜக, தனிப்பெரும்பான்மையைக் கூட பெற முடியாமல் 240 இடங்களோடு சுருங்கியது.மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்
இருப்பினும், கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை 16, 12 இடங்கள் முறையே வென்றதன் மூலம் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இதனாலேயே, கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் மிக முக்கிய கட்சிகளாகக் கவனிக்கப்படுகிறது.
அதற்கேற்றவாறு, இந்த இருகட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடியின் கேபினட்டில் அங்கம் வகிக்கும் பீகாரின் முன்னாள் முதலமைச்சரும், தற்போது மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி, எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து கிடையாது எனத் தெரிவித்திருக்கிறார்.மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி
ஹாஜிபூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஒரே எம்.பி ஜிதன் ராம் மஞ்சி, ``நாட்டில் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதை நிதி ஆயோக் தெளிவாக மறுத்திருக்கிறது. எனவே, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது. அதேசமயம், வளர்ச்சிக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும், அதை மத்திய அரசும், பிரதமர் மோடியும் வழங்குவார்கள்" என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இத்தகைய கூற்றால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரிடமிருந்து எத்தகைய எதிர்வினை வரும் என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும்.2 ஆண்டுகளுக்குப் பின் விசாரணைக்கு வரும் வழக்கு... காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மீளுமா?
http://dlvr.it/T9ZL8W

`திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம்; அதிகாலையில் அழைத்துச் சென்றது ஏன்..?’ - எடப்பாடி பழனிசாமி
வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் கடந்த 11-ம் தேதி காலமானதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேகர் ரெட்டியின் வீட்டுக்கே சென்று உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். சேகர் ரெட்டிக்கும் ஆறுதல் கூறினார். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் `ஜனநாயக’ முறைப்படி நடைபெறவில்லை. அதனால், அ.தி.மு.க போட்டியிடவில்லை. சேகர்ரெட்டி வீட்டில் எடப்பாடி பழனிசாமி
அதிகாரப் பலம், பண பலத்தினால்தான் தி.மு.க வெற்றிப் பெற்றிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்குத்தான் அதிகமான வாக்குகள் பதிவாகின.
காவிரி விவகாரத்தில், `ஒவ்வொரு ஆண்டும், கர்நாடக அணையில் இருந்து குறிப்பிட்ட அளவுக்குத் தண்ணீர் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஆனால், அதைப்பற்றியெல்லாம் `இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க பேசுவது கிடையாது. தமிழ்நாடு விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத அரசாங்கம். தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் கவலைப்படாத ஓர் அரசாங்கம். அவர்களுக்குக் கூட்டணிதான் முக்கியம். அதிகாரம்தான் முக்கியம். இந்த `விடியா’ தி.மு.க முதலமைச்சர் எந்தக் குரலையுமே கொடுப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி
இன்று சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்பவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர். மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக அதிகாலையில் அவரை வேக வேகமாக அழைத்துச் சென்றது ஏன்?. கைவிலங்குப் போட்டு பாதுகாப்போடு சென்றிருக்க வேண்டும். ஏற்கெனவே, `உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை’ என்று ஆம்ஸ்ட்ராங் உறவினர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொல்லி வந்த நிலையில், இந்த என்கவுன்ட்டர் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது’’ என்றார்.`செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி; 14 மாதங்களுக்குப் பிறகே வழக்கு அறிக்கை தாக்கல்!'- கவர்னர் ரவி காட்டம்
http://dlvr.it/T9Z4cr

`செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி; 14 மாதங்களுக்குப் பிறகே வழக்கு அறிக்கை தாக்கல்!'- கவர்னர் ரவி காட்டம்
விருதுநகர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசுகையில், "தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். தமிழகம் இன்றைக்கு கல்வியில் முன்னேறி இருப்பதற்கும், கல்வியறிவு பெற்றவர்களின் பட்டியலில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கும் அடித்தளமிட்டவர் காமராஜர்தான். வெறுமனே கல்விக்கு மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்கும் நிறைய பங்காற்றியுள்ளார். கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் தொடக்கப் பள்ளியினை ஆரம்பித்ததோடு, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளியையும் திறந்துவைத்தார்.கவர்னர் ரவி
சமூகநீதி மற்றும் பொறுப்புக்கு காமராஜரே அடிகோலிட்டவர். தமிழகத்தில் அவரது ஆட்சிக்காலம் பொற்காலமாகும். ஆனால் தற்போது, தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பற்றி பேச மட்டுமே செய்கிறார்கள். கடந்த ஆண்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் பலர் பலியானார்கள். ஆனால் அது குறித்த விசாரணையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதியோ பெற்று தரப்படவில்லை. தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்தே கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான வழக்கிற்கு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த பாகுபாடும் அலட்சியப்போக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல" என பேசினார்.``கருணாநிதியை தவிர எனக்கு வேறெந்த 'நிதி'யும் தெரியாது" - ஆளுநர் இல.கணேசன்
http://dlvr.it/T9YsZF

Tamil News Live Today: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு!
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு பிரசாரம் களம் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ட்ரம்ப் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆதரவாளர்கள், மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. காதிலிருந்து ரத்தம் சொட்டிய நிலையில் தனது கையை உயர்த்திக் காட்டினார் ட்ரம்ப். அதையடுத்து பாதுகாவலர்கள் அவரை மேடையிலிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர்.
ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
http://dlvr.it/T9Yhmb

Saturday, 13 July 2024
``ரூ.10,000 கோடி முதலீடு; 5000 பேருக்கு நேரடி வேலை" அசத்தலாக வரும் விழிஞ்ஞம் துறைமுகம்..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் சுமார் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் பணி தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தின் பணி சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்தது.
மற்ற துறைமுகங்களில் இல்லாத பல விஷயங்கள் விழிஞ்ஞம் துறைமுகத்தில் உள்ளன. சர்வதேசக் கடல் பாதையில் இருந்து மிக அருகில் அதாவது, 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அமைந்துள்ளது இத்துறைமுகம். கடல் பாதைக்கு இவ்வளவு அருகில் நம் நாட்டில் வேறு துறைமுகங்கள் இல்லை என்கிறார்கள்.விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகம்
மற்ற துறைமுகங்களை ஆழப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், விழிஞ்ஞம் துறைமுகம் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் வகையில் முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இனி மொத்தம் உள்ள 4 கட்ட பணிகளும் நிறைவடைந்தபிறகு ஆண்டுக்கு 30 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் வகையில் அமைய உள்ளது. அதன்பிறகு ஒரே சமயத்தில் 5 பெரிய மதர் ஷிப்புகள் துறைமுகத்துக்குள் வர முடியும்.விழிஞ்ஞம் துறைமுகத்தில் முதல்வர் பினராயி விஜயன்விழிஞ்ஞம் துறைமுகம்... அதானியைப் பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன்!
துறைமுகத்துக்குள் வரும் கப்பல்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். துறைமுகத்தில் இறக்கப்படும் கண்டெய்னர்களுக்கு கஸ்டம்ஸ் வரி செலுத்தவேண்டும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் வரும். விழிஞ்ஞம் துறைமுகம் மூலம் 5000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் சம்பந்தப்பட்ட வேலைக்கான பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கண்டெய்னர் பிசினஸ், தொழில் துறை, உற்பத்தித் துறை, போக்குவரத்து, சுற்றுலா என கேரள மாநில வளர்ச்சிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டம் காரணமாக அமைய உள்ளது.
விழிஞ்ஞம் துறைமுகத்தில் முதல் கப்பலாக சீனாவில் இருந்து ஷென் ஹுவா-15 என்ற கப்பல் கடந்த அக்டோபர் மாதம் வந்தடைந்தது. அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து சார் பெர்னாண்டோ என்ற 350 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் நேற்று முன்தினம் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வந்தது. 1950 கண்டெய்னர்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல் முதல் சரக்குக்கப்பல் என்ற வகையில் வரவேற்பு விழா மற்றும் துறைமுகத்துக்கான அதிகாரப்பூர்வமான செயல்பாடுகளுக்கான திறப்பு விழா ஆகியவை நேற்று விழிஞ்ஞம் துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கேரளா மாநில துறைமுகத் துறை அமைச்சர் வாசவன் தலைமை வகித்தார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.துறைமுக செயல்பாடுகள் தொடக்கவிழாவில் முதல்வர் பினராயி விஜயன்விழிபிதுங்கவைக்கும் விழிஞ்ஞம் அதானி துறைமுகம்! - மோடியாக மாறுகிறாரா பினராயி விஜயன்..?
விழிஞ்ஞம் துறைமுக செயல்பாடுகளைத் தொடங்கிவைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "நமது நீண்ட கால கனவு நனவாகி இருக்கிறது. துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகும். விழிஞ்ஞம் துறைமுகத்தின் மூலம் இந்தியா உலக வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த அதானிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச லாபிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிய விளைவாக இந்த துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விழிஞ்ஞம் அமைந்துள்ளது. மிகப்பெரிய மதர் Top-up இன்னும் அதிகமாக வெளிநாட்டில் இருந்து இங்கு வரும்.
உலகின் மிகப்பெரிய கப்பல்களை விழிஞ்ஞம் துறைமுகத்தில் நிறுத்த முடியும். ட்ரையல் ரன் தொடங்கப்பட்டாலும் விழிஞ்ஞம் துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமான செயல்பாடுகள் இன்று முதல் தொடங்குகிறது. இது விரைவில் முழுமையான செயல்பாடாக மாறும்.
இது முதல் கட்டம் மட்டுமே, 2028-ம் ஆண்டுடன் விழிஞ்ஞம் துறைமுகம் முழுமையடைந்த துறைமுகமாக மாறும். பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு விழிஞ்ஞம் துறைமுகம் வழிவகுக்கும். அதற்கு வேண்டிய ஒப்பந்தத்திற்கு கையெழுத்து போட உள்ளேன். அதானி குழுமத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.விழிஞ்ஞம் வர்த்தக துறைமுக வளாகத்தில் பலூன்களை பறக்கவிட்ட முதல்வர் பினராயி விஜயன்
சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசு விழிஞ்ஞம் துறைமுகத்துக்காக கடுமையாக உழைத்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுக அனுமதிக்காக இடது ஜனநாயகம் முன்னணி கூட்டணி அரசு முயற்சித்தது. 2007-ல் விழிஞ்ஞம் இன்டர்நேஷனல் ஷிப்பிங் லிமிடெட்-ஐ (வி.ஐ.எஸ்.எல்) நோடல் ஏஜென்சி ஆக்கினோம். 2010 ஆம் ஆண்டு டெண்டர் நடவடிக்கைகளுக்கு முயற்சித்தோம். அப்போது சீனா கம்பெனி வந்ததாக சிலர் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது மத்திய மன்மோகன் சிங் அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை அடுத்து 212 நாட்கள் நீண்ட மக்கள் போராட்டத்தை நடத்தினோம். அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு மீண்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாம் ஒன்றாக முயற்சித்து அதன் பலனாக இந்த துறைமுகம் நமக்கு கிடைத்துள்ளது" என்றார்.
விழிஞ்ஞம் துறைமுகம் இந்தியத் துறைமுகங்களில் முக்கியமானதாக மாறும் என எதிர்பார்ப்போம்!முதலீட்டில் லாபம் ஈட்டுவது எப்படி? தெரிந்துகொள்ள திருநெல்வேலி மக்களுக்கு அரிய வாய்ப்பு...
http://dlvr.it/T9Xv0d