Monday, 27 March 2017
டிஜிட்டல் பரிவர்த்தனை ஊழலை குறைக்கும் : மோடி

பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கடவுளை வழிபாடு செய்வதற்கு வெவ்வேறு வடிவங்கள் இருக்கலாம் . இந்தியா எப்போதும், கடவுள் ஒருவரே என வலியுறுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஊழல் குறைக்க வழிவகை செய்ய
லாம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலூர் : கத்தியை காட்டி மிரட்டி மாணவரிடம் பணம் பறிப்பு
மேலூர்: மேலூரில் கல்லூரி மாணவரிடம் மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் , மோதிரத்தை பறித்த சென்றனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருபவர் சிவமுருகன். இவர் சம்பவத்தன்று மேலூர் சந்தைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது இரண்டு டூ வீலர்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி மாணவர் சிவமுருகனிடம் இருந்த செல்போன், பணம் , வெள்ளி மோதிரம் போன்றவற்றை பறித்து சென்றனர்.
மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

இந்தியருக்கு உதவிய அமெரிக்கருக்கு பரிசு

அழைப்பு:
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அமெரிக்காவின் இயன் கிர்ல்லாட் என்பவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இயன் கிர்ல்லாட்டிற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்திருந்தார். கிர்ல்லாட் இந்தியா வர வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
செக்:
இந்நிலையில்,கிர்ல்லாட்டை கவுரவிக்கும் வகையில், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சார்பில் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கான செக் வழங்கப்பட்டது. இந்த செக்கை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா வழங்கினார்.
பெருமை:
இந்த விழாவில் கிர்ல்லாட் பேசுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்காவிட்டாலோ அல்லது அதற்கான முயற்சியில் நான் இறங்காமல்இருந்திருந்தால், நான் உயிரோடு இருப்பேனா என சொல்ல முடியாது. மக்கள் அதிகாரம் அளிக்க நாம் உதவ வேண்டும். நம்பிக்கை மற்றும் அன்பை பரப்ப வேண்டும். இங்கு நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விமான நிறுவனங்கள் மீது வழக்கு: ஊழியரை செருப்பால் அடித்த எம்.பி., மிரட்டல்

இது தொடர்பாக ரவீந்திர கெயிக்வாட் கூறுகையில், எனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.